Tags

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில், ஜி.எஸ்.டி., 'ரீபண்ட்' பெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் 19 ஆகஸ்ட் 2018 அன்று நடைபெற்றது. 

தேசிய ஜி.எஸ்.டி., கவுன்சில் உறுப்பினர் திரு.மகேந்திர சிங் I R S , முதன்மை தலைமை கமிஷனர் திரு. ராவ், திருச்சி சுங்க பிரிவு மண்டல கமிஷனர் திரு. அசோக், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் திரு. ராஜா சண்முகம், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

மத்திய ஜி.எஸ்.டி., கமிஷனர் குமரேஷ் வரவேற்றார்.

தேசிய ஜி.எஸ்.டி., கவுன்சில் உறுப்பினர் மகேந்திர சிங் சிறப்புரையாற்றினார்.:

ஜி.எஸ்.டி., அமலாக்கத்தில், திருப்பூர் தொழில் துறையினர் முழு ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். 

உங்களது பிரச்னைகளை, ஏற்றுமதியாளர் சங்கம், எங்களுக்கு தொடர்ந்து தெரியப்படுத்தி வருகிறது. ஜி.எஸ்.டி., அமலாகி, ஓராண்டான நிலையில், முக்கிய தொழில் நகரங்கள் வாரியாக, ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தொழில் துறையினர் சந்திக்கும் பிரச்னையை அறிந்து, அதற்கான தீர்வுகளை வழங்கப்படும். ஏற்றுமதியாளர்களின் கோரிக்கை அனைத்தும், கவுன்சிலில் ஆலோசித்து, அமைச்சரவைக்கு பரிந்துரைக்கப்படும். ஜி.எஸ்.டி., பதிவு செய்வது, 'ரீபண்ட்' பெறுவதில் சில பிரச்னை இருந்தாலும், சரியான தீர்வு வழங்கப்படும்.

மத்திய அரசு, ஜி.எஸ்.டி., கவுன்சிலும், திருப்பூருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். ஜி.எஸ்.டி., அமலாக்கத்தில், தேசிய அளவில் திருப்பூர் அதிகார மையமாக விளங்குகிறது. 

இவ்வாறு, அவர் பேசினார்.

சங்க தலைவர் திரு ராஜா சண்முகம் அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், மத்திய மாநில GST அதிகாரிகள், ஆடிட்டர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

e-max.it: your social media marketing partner