Tags

இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் சார்பில், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் பயன்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று மாலை நடந்தது.


இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:

 

கடந்த, 15 ஆண்டு கால பேச்சுக்கு பின், இந்தியா, பிரிட்டன் உடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் இறுதியாக எட்டப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு, திருப்பூரின் ஏற்றுமதி தற்போது, 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் கோடி மதிப்புடையது. அடுத்த, இரு ஆண்டுகளுக்குள் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அமெரிக்கா விதித்துள்ள வரி தாக்கத்தால் ஏற்றுமதியாளர்கள் தற்போது சில சவால்களை எதிர்கொள்கின்றனர். ஒரு சுழற்சி பாதிக்கப்பட்டதால், 4,000 - 4,500 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுழற் சிக்கு, 1,500 கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமான விஷயங்களில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் பல பிரதிநிதித்துவங்களை செய்துள்ளது. விரைவில், நல்ல நேர்மறையான முடிவுகள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, கோவையில் உள்ள வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இணை இயக்குனர் ஜெனரல், இளம் தொழில்முறை வல்லுநர் ஹரி பிரியா, சி.இ.டி.ஏ. ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்தும், இந்திய அஞ்சல் துறையின் ஏற்றுமதி தளவாட நடவடிக்கைகள் குறித்து கோவை இந்திய அஞ்சல் துறையின் எஸ்.எஸ்.பி.ஓ. சிவசங்கர், எல்லை தாண்டிய மின் வணிகத்தின் சாத்தியக்கூறு குறித்து அமேசான் குளோபல் தெற்கு பிராந்திய விற்பனைத் தலைவர் தீபக் ஆகியோர் பேசினார்.

ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் ஆனந்த் நன்றி கூறினார்.

 

Published on: 25 September 2025

Source: Dinamalar

e-max.it: your social media marketing partner