வரும் 4-ம் தேதி திருப்பூரில் 3 நாள் சர்வதேச பின்னலாடை கண்காட்சி தொடங்குகிறது. இதன் மூலம், புவி மாசுபடாத ஆடை உற்பத்தி இலக்குகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக தென் பிராந்திய தலைவர் ஏ.சக்திவேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
''இந்தாண்டு 40,000 கோடி ரூபாய் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக இலக்கை அடைவோம்'' என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
''சவால்களைக் கடந்து திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம் இரட்டிப்பாக உயர வாய்ப்புள்ளது'' என்று சுதந்திர தின விழாவின்போது, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் கூறினார்.
ஆடை உற்பத்தி நிறுவனங்களில் காா்பன் உமிழ்வைக் கண்டறிதல் மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் திருமுருகன்பூண்டியில் நடைபெற்றது.
கார்பன் உமிழ்வை கண்டறிதல்; கட்டுப்படுத்துதல் குறித்த கருத்தரங்கம், திருமுருகன்பூண்டி பாப்பீஸ் விஸ்டா ஓட்டலில் நேற்று நடைபெற்றது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'பேர் டிரேட்' இந்தியா, 'சென்டர் பார் சோஷியல் மார்க்கெட்ஸ்' (சி.எஸ்.எம்.,) இணைந்து நடத்தப்பட்டது.
பசுமை சார் உற்பத்தி குறித்து, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐரோப்பா களமிறங்கியுள்ளது. திருப்பூரில் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு இதற்கான பயிற்சி துவங்கியது.