தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன உறுப்பினர்கள் உலகளாவிய கணக்கு (UAN) எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து சிறப்பு கூட்டம், கடந்த வெள்ளி கிழமை (14-12-2018) அன்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த 14.06.2018 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவையில் 'ஜவுளித்தொழிலின் வளர்ச்சியை தமிழ்நாட்டில் மேலும் ஊக்குவிக்கும் விதமாக, தமிழகத்தில் முதல் முறையாக அடுத்தாண்டு தமிழ்நாடு அரசின் சார்பாக கோயம்புத்தூரிலுள்ள கொடிசியா அரங்கில் பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்' என்று அறிவித்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் சார்பில் நமது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் "தமிழக சர்வதேச முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2019" பற்றிய விளக்கவுரைக் கூட்டம் கடந்த வெள்ளி கிழமை, 23 நவம்பர் 2018 அன்று நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீன்தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து கடந்த சனிக்கிழமை (06-10-2018) அன்று ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை அலுவவலர்களுடனான கருத்தரங்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் விழா இந்திய பின்னலாடை கண்காட்சி வளாகத்தில் (IKF Complex) நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சியில் பெண்கள் அதிகம் படிக்கும் "ஜெய் வாபாய்" பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைகள் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது.
தேசிய சிறு தொழில் கழகம் சார்பில், மூலப்பொருள் வாங்க கடனுதவி பெறுவது குறித்த கருத்தரங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில், நேற்று (12-10-2018) நடைபெற்றது.